Friday, March 13, 2009

நேர்மைக்கு அரோகரா

ஒரு காலத்தில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு தோதாகவே இருந்து வந்தது. டி.என்.செஷன் தலைமை தேர்தல் ஆணையராக வந்த பிறகு நிலைமை மாறியது. அவர் அரசியல் சட்ட அந்தஸ்த்துக்கு உட்பட்டு நடுநிலைமையுடன் பணிபுரிந்துவந்தார். இவரின் தலைமைக்குப்பிறகுதான் தேர்தல்கமிஷனின் மீதான மக்களின் புரிதல் நம்பிக்கை அளித்தது. ஆனால் தற்பொழுது கோபால்சாமிக்கும், நவீஞ்சவ்ளாவுக்கும் இடையில் ஏற்ப்பட்ட பிரச்சனைகள் மாண்புமிகு குடியரசுத்தலைவரிடம் முறையிடும் அளவுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் தள்ளப்பட்டார். நவீன்சாவ்ளாவை நீக்க தம்மால் முடியாது என்று அவருக்கு நன்றாக தெரியும். இப்பிரச்சனையை குடியரசுத்தலைவரிடம் கொண்டு சென்றதின் மூலம் இந்திய மக்கள் அனைவரும் தெரிந்துகொண்டனர். மேலும் நவீன்சாவ்லா ஷா கமிஷனால் அரசு பதவி எதையும் வகிக்க தகுதி இல்லாதவர் என்று கடுமையாக குற்றஞ்சாட்டப்பட்டவர். கோபால்சாமி ஒரு நேர்மையான அதிகாரி. நவீன்சாவ்லா காங்கரெஸ் கட்சிக்கு மிகவும் நெருக்கமானவர். கோபால்சாமி இவர் மீது குற்றச்சாட்டு எழுப்பிய உடன் மத்திய அமைச்சர் கோபால் சாமீ சொல்வது போல் நவீனை நீக்க முடியாது என்று அறிக்கை விடுகிறார். நவீந்தன் அடுத்த தலைமை தேர்தல் ஆணையர் என்றும், கோபால்சாமி பாரதிய ஜனதா கட்சிக்கு நெருக்கமானவர் எனவும் அறிக்கையில் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் தனது முடிவை தெரிவுப்பதற்கு முன்னரே இப்படி அறிக்கை விடுத்ததன் மூலம் குடியரசுத்தலைவரும் இப்படிதான் தங்கள் முடிவும் இர்ருக்க வேண்டும் என்பதுபோல் இருந்தது. இந்நாட்டில் நேர்மைக்கு கிடைக்கும் பரிசை பார்த்தீர்களா? நவீனை தலைமை தேர்தல் ஆணையராக கொண்டுதான் வரும் மக்களவை தேர்தலை நாம் சந்திக்க வேண்டும்.இனி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆளும் கட்சி சொல்வதுபோல்தான் செயல்படும். இதைத்தானே ஆளும் கட்சியும் எதிர்பார்த்தது. இத் தேர்தல் ந"வீண்" தேர்தல். நேர்மைக்கு அரோகரா.

No comments:

Post a Comment