Wednesday, April 25, 2012

சித்திரை திருவாதிரை

அன்பு நண்பர்களே, ஆன்மிக மெய்யன்பர்களே, ஸ்ரீ வைஷ்ணவ அடியார்களுக்கு வணக்கம்.  நமது பரமாச்சார்யன் ஸ்ரீமத் இராமானுஜரின் சித்திரை திருவிழாவில் இன்று 26 .4 .2012  திருத்தேர் விழாவும் நாளை 27 .4 .2012  சாற்று மறையும் நடைபெற உள்ளது.  அனைத்து அடியார்களும் பெரும்பூதூர் நோக்கி செல்வோம்.  பரமாச்சார்யன் அருள் பெறுவோம்.  ஸ்ரீ வைஷ்ணவம் மென்மேலும் வளரச் செய்வோம்.

Wednesday, June 16, 2010

ஸ்ரீமன் னாராயணா


ஒரு கோவணான்டியின் கடிதம்

மாண்புமிகு புரட்சித் தலைவி, தங்கத் தாரகை, அம்மா அவர்களுக்கு வணக்கம்.
தமிழகத்தின் ஒரு மூலையில் வாழும் கோவணாண்டியின் அன்புக் கடிதம். னலமா அம்மா? னாங்கள் னல்ல சொளக்யம்.

Monday, April 20, 2009

கருணாலயம்

நண்பர்களே எனது முயற்ச்சிஇனால் கருணாலயம் அறக்கட்டளை என்ற புதிய அமைப்பை உருவாக்கி உள்ளேன். இதன் மூலம் பல நல்ல நற்காரியங்களை செய்ய உத்தேசித்து உள்ளேன். எல்லாம் உங்களைப்போன்ற நல்ல உள்ளம் படைத்த நண்பர்களின் உதவியோடுதான்.

Friday, March 13, 2009

நேர்மைக்கு அரோகரா

ஒரு காலத்தில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு தோதாகவே இருந்து வந்தது. டி.என்.செஷன் தலைமை தேர்தல் ஆணையராக வந்த பிறகு நிலைமை மாறியது. அவர் அரசியல் சட்ட அந்தஸ்த்துக்கு உட்பட்டு நடுநிலைமையுடன் பணிபுரிந்துவந்தார். இவரின் தலைமைக்குப்பிறகுதான் தேர்தல்கமிஷனின் மீதான மக்களின் புரிதல் நம்பிக்கை அளித்தது. ஆனால் தற்பொழுது கோபால்சாமிக்கும், நவீஞ்சவ்ளாவுக்கும் இடையில் ஏற்ப்பட்ட பிரச்சனைகள் மாண்புமிகு குடியரசுத்தலைவரிடம் முறையிடும் அளவுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் தள்ளப்பட்டார். நவீன்சாவ்ளாவை நீக்க தம்மால் முடியாது என்று அவருக்கு நன்றாக தெரியும். இப்பிரச்சனையை குடியரசுத்தலைவரிடம் கொண்டு சென்றதின் மூலம் இந்திய மக்கள் அனைவரும் தெரிந்துகொண்டனர். மேலும் நவீன்சாவ்லா ஷா கமிஷனால் அரசு பதவி எதையும் வகிக்க தகுதி இல்லாதவர் என்று கடுமையாக குற்றஞ்சாட்டப்பட்டவர். கோபால்சாமி ஒரு நேர்மையான அதிகாரி. நவீன்சாவ்லா காங்கரெஸ் கட்சிக்கு மிகவும் நெருக்கமானவர். கோபால்சாமி இவர் மீது குற்றச்சாட்டு எழுப்பிய உடன் மத்திய அமைச்சர் கோபால் சாமீ சொல்வது போல் நவீனை நீக்க முடியாது என்று அறிக்கை விடுகிறார். நவீந்தன் அடுத்த தலைமை தேர்தல் ஆணையர் என்றும், கோபால்சாமி பாரதிய ஜனதா கட்சிக்கு நெருக்கமானவர் எனவும் அறிக்கையில் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் தனது முடிவை தெரிவுப்பதற்கு முன்னரே இப்படி அறிக்கை விடுத்ததன் மூலம் குடியரசுத்தலைவரும் இப்படிதான் தங்கள் முடிவும் இர்ருக்க வேண்டும் என்பதுபோல் இருந்தது. இந்நாட்டில் நேர்மைக்கு கிடைக்கும் பரிசை பார்த்தீர்களா? நவீனை தலைமை தேர்தல் ஆணையராக கொண்டுதான் வரும் மக்களவை தேர்தலை நாம் சந்திக்க வேண்டும்.இனி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆளும் கட்சி சொல்வதுபோல்தான் செயல்படும். இதைத்தானே ஆளும் கட்சியும் எதிர்பார்த்தது. இத் தேர்தல் ந"வீண்" தேர்தல். நேர்மைக்கு அரோகரா.

Monday, March 2, 2009

ரெட்டைசுழி

ரெட்டைசுழி தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக இரண்டு இமயங்கள் இணைந்து நடிக்கும் தமிழ் படம் ஆகும்.பிரபல இயக்குனர் ஷங்கர் இப்படத்தை தயாரிக்கிறார். பிரபல இயக்குனர் திருவாளர்கள் பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜா ஆகிய இருவரும் கலக்க உள்ளனர். திரு பாலச்சந்தர் அவர்களிடம் பணிபுரிந்த தாமிரா அவர்கள் இயக்குனராகவும் பல்வேறு தொலைகாட்சி தொடர்களுக்கு வசனம் எழுதியவரும், பல தமிழ் பத்திரிக்கைகளில் ஓவியராக பணிபுரிந்தவருமான செந்தமிழ் என்கிற நல்லான் தமிழ் என்பவர் வசனகர்த்தவகவும் பிள்ளையார்சுழி போடும் முதல் படம். ஆரம்பமே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தை விரைவில் வெள்ளித் திரையில் எதிர்பார்க்கலாம்.

Friday, February 27, 2009

இலங்கை தமிழர் போராட்டத்தில் தமிழக அரசியல் கட்சிகள் சாதித்தது என்ன? அவரவர் இஷ்டம்போல் தனித்தனி இயக்கங்கள் கண்டது விட என்ன சாதித்துவிட்டார்கள்?ஒன்று தெரிந்துகொள்ளவேண்டும் என்னவென்றால் தமிழகமக்கள் இலங்கை பிரச்சனையை மட்டும் தங்களது அளவுகோல்களாக நினைப்பது கிடையாது. இதை நினைத்து நமக்கு ஒட்டு போடுவார்கள் என்று நினைத்தால் மண்ணை கவ்வ வேண்டியதுதான். இவர்கள் இந்த பிரச்னையை தேசிய பிரச்சனையாக ஆக்க எத்தனிக்காமல் குண்டுசட்டிக்குள் குதிரை ஒட்டிக்கொண்டு அனுதினமும் செயல்பட்டுக் கொண்டிருந்தால் பிரச்சனை தீருமா? முதலில் இதை தமிழகம் தாண்டி தேசிய முக்கியத்துவம் உள்ள பொருளாக மட்ட்ரீனால் மட்டுமே உலக கவனத்துக்கு கொன்று சென்று ஓரளவாவது முன்னேற்றம் ஏற்படும். இவர்களக்கு இதற்க்கெல்லாம் நேரம் இர்ருக்கது. தமிழர் பிரச்னையை தவிர்த்து தமிழக வக்கீல்கள் பிரச்சனை உள்ளது. அதையும்தாண்டி தமிழக இளைனர்களை உசுப்பேற்றும் பிரச்சனை உள்ளது. நான் கேட்க்கிறேன் இலங்கை பிரச்சனையில் உங்கள் உண்மையான நிலைதான் என்ன? வேடம் போட்டது போதும். uன்மையை இர்ருங்கள்.